Header Ads

ஐந்து மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 64 பேர் பலி!


தென் ஆபிரிக்காவின் முக்கிய வணிக மையமாக கருதப்படும் ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பெர்கில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில், 43 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது.

விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இன்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டாலும், 64 பேர் பலியாகினர்.

இதுவரை 64 பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.