4 மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் ராகுல்! : அமோக வரவேற்பு
தகுதி இழப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி 4 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் சென்றார்.
அவரை ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழங்கி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி நாடாளுமனற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ராகுல் காந்தியின் தகுதி இழப்பை மக்களவைச் செயலகம் ரத்து செய்தது.
இதனைத் தொடந்து நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் விதமாக நேற்று பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி நாடாளுமன்றம் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற மறுவருகையைக் கொண்டாடும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments