சீன தலைநகர் பீஜிங்கில் கடும் மழை: 33 பேர் பலி, 18 பேரை காணவில்லை!
சீன தலைநகர் பீஜிங்கில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணாமல் போயுள்ளனர்.
பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் மழை பெய்ததால், நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழையால் 59 ஆயிரம் வீடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
100 இற்கும் மேற்பட்ட பாலங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டால், நகரை மீண்டும் கட்டியெழுப்ப 3 ஆண்டுகள் வரை ஆகும் என பீஜிங் துணை மேயர் சியா லின்மாவோ தெரிவித்துள்ளார்.
No comments