Header Ads

பிரான்ஸில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு!


பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் பரவிய தீ காரணமாக 11 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில்

இன்று (9) முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதியொன்றிலேயே தீப்பற்றியுள்ளது.

9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எனினும், தீ பரவியமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. 




No comments

Powered by Blogger.