மெக்சிகோவில் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர்!
மெக்சிகோவில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சினாலோவா குழுவானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பு என அறியப்படுகிறது. கடந்த 1980 களில் இருந்தே மெக்சிகோ நாட்டின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டுள்ளது.
இந்த நிலையிலேயே பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக சமையல்காரர் என அறியப்படும் சாண்ரியாகோ மேச லோபெஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மொத்த அதிகாரிகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
சினாலோவா குழு கடத்தி கொலை செய்யும் பெரும்பாலான சடலங்களை இவர் அமிலத்தில் கரைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு ண்ணை ஒன்றில் பணியாற்றியபோது சடலங்களை அமிலத்தில் கரைக்கும் செயலை முன்னெடுத்தேன் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் பெரிய பீப்பாய்க்குள் தண்ணீர் மற்றும் அமிலத்தை கலந்து உடல் பாகங்களை நிரப்பி கரைத்துள்ளனர். மட்டுமின்றி, சினாலோவா குழுவினரில் சிலருக்கு தாம் பயிற்சியும் அளித்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் கைதான பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பொலிஸாரை அணுகி, தங்களின் உறவினர்களை அடையாளம் காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில், பண்ணை ஒன்றில் இருந்து 200 கிலோ அளவுக்கு மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில், சாண்ரியாகோ மேச லோபெஸ் தெரிவிக்கையில், 300 சடலங்கள் வரையில் தாம் அமிலத்தில் கரைத்திருக்கலாம் என விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.
No comments