சந்திராயன் -03 விண்கலத்தின் நாளை நிலவில் தரையிறங்கிறது!
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ள இந்தியாவின் சந்திராயன் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.
இலங்கை நேரப்படி நாளை மாலை குறித்த லேண்டர் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினால் அனுப்பப்பட்ட,சந்திராயன் 02 விண்கலத்தின் லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் போதே, அந்த திட்டம் தோல்வியடைந்திருந்தது.
எனினும் இந்த திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள நேர்த்தியான வடிவமைப்பு காரணமாக நிலவில் தரையிறங்கும் பணிகள் வெற்றியடையும் என இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சிகளை நேரலையாக வழங்கவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா அண்மையில் அனுப்பிய லூனா -25 திட்டம் தோல்வியடைந்திருந்தது.
இந்தநிலையில், குறித்த திட்டத்தில் வெற்றியடைந்தால் நிலவின் தென் துருவத்திற்கான ஆய்வில் வெற்றிக்காணும் முதல் நாடாக இந்தியா வரலாற்றில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments