France அரச தலைவர் Emmanuel Macron இலங்கைக்கு பயணம்..
France சின் கடல்கடந்த மாவட்டங்களும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் அரச தலைவர் Emmanuel Macron இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு செல்லவுள்ளார் என் அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பயணம் முன்கூட்டியே அறிவிக்கப்படாத திடீர் விஜயமாகும் எனவும் அறிய முடிகிறது. வெள்ளி,சனி கிழமைகள் இலங்கையில் தங்கியிருக்கும் அரச தலைவர் Emmanuel Macron இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, உலகம் இன்று எதிர் கொண்டுள்ள சவால்கள், இலங்கையின் பொருளாதார நிலை போன்ற பல விடையங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்து உரையாடவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந்த பயணம் இலங்கைக்கும், பிரான்சிற்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணம் என வர்ணிக்கப்படுகிறது. காரணம் பிரான்சின் ஒரு அரச தலைவர் இலங்கைக்கு பயணம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
No comments