கொழும்பில் மீண்டும் வெடித்த போராட்டம்: பெரும் பதற்றம்
கொழும்பிலும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது EPF ETF ஓய்வூதியத்தில் கை வைக்காதே, அடிமை தொழிலாளர் சட்டம் வேண்டாம், சகல ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கு, IMF மரண பொறியை தோற்கடிப்போம் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து திருப்பி அனுப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்ட களத்தில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்தது.
அத்துடன், கொழும்பு - பொரளை பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் மீது சற்றுமுன் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் வைத்து ஊடகவியலாளர் தரிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் முச்சக்கரவண்டிக்குள் இருந்து காணொளி பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் தன்னை தாக்கி கைது செய்ததாக தரிந்து குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வனாத்தமுல்ல அடுக்குமாடி கட்டட பகுதிக்கு பெருமளவான ஆயுதம் தாங்கிய படையினர் வரவழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
No comments