வசந்த முதலிகேவுக்கு பிணை!
கொழும்பில் நேற்று (27) கைது செய்யப்பட்ட மக்கள் போராட்டக்கள இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றிருந்த வழக்கொன்றில் ஆஜராகாமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று, அமைதியின்மையை தோற்றுவித்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments