அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு செயலாளர்கள் அவுஸ்திரேலியா விஜயம்
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனும் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுடனான சந்திப்பிற்கான பிரிஸ்பேர்னிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அவுஸ்மின் சந்திப்பிற்காக அமெரிக்காவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று லொயிட் ஒஸ்டின் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட்மார்லசை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கைகளில் இருந்து விலகும் சீன இராணுவத்தின் முயற்சிகள் குறித்து அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் கரிசனை கொண்டுள்ளன என அமெரிக்க பாதுகாப்புசெயலாளர் தெரிவித்துள்ளார்.
கிழக்குசீன கடலில் இருந்து தென்சீன கடல்வரை- தென்மேற்கு பசுபிக்வரை சீன இராணுவத்தின் வல்வந்த நடவடிக்கைகளை நாங்கள் பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் இந்த நடவடிக்கைகளில் இருந்துதங்களை பாதுகாக்க முயலும் நேச நாடுகளிற்கு அமெரிக்கா உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் மிகவும் கொந்தளிப்பான மற்றும் சிக்கலான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றது என்று மறைமுகமாக என எச்சரித்துள்ளார்.
No comments