தமிழக முதல்வருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு
அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழக முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதுவர் டி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
No comments