ரணிலை மொட்டு எம்.பிக்கள் இரகசிய சந்திப்பு: ஜனவரியில் புதிய கூட்டணி
புதிய அரசியல் கூட்டணியயை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமனற உறுப்பினர் நிமல் லான்சாவுடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில், கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரியில் இவர்களின் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் புதிய கூட்டணியில் சேருவதற்கு நிமல் லான்சாவுடன் பல கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும்
அவற்றுள் மொட்டு கட்சியின் பிரதிநிதிகளும் அடங்குவதாக குறித்த அரசியல் வட்டங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து
கலந்துரையாடிய போது புதிய கூட்டணி அமைப்பது குறித்து அறிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, மற்றும் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர
சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ஏற்கனவே நிமல் லான்சாவை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்களினால் செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments