Header Ads

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

 

சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில், இருவேறு சந்தர்ப்பங்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று (29) உயிரிழந்தனர்.

சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரவிருந்த பெண்னொருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சென்றடைந்த ஒருவருவம் இன்று உயிரிழந்தார்.

குறித்த நபர், சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அமைய குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 43 வயதான பெண்ணொருவரும், 48 வயதான ஆண் ஒருவருமே உயிரிழந்தனர்.

உயிரிழந்த குறித்த இரண்டு இலங்கையர்களின் சடலங்களும் குரோம்பேட்டை அரச வைத்தியசாலையில், வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில், சென்னைக்கான இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.