Header Ads

🔴 பிரான்ஸ்-இரஷ்யா நட்பில் விரிசல்! - தொலைபேசி அழைப்பை தவிர்க்கும் ஜனாதிபதிகள்!!

 


இரஷ்யா-பிரான்ஸ் நாடுகள் தங்களது நட்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்த இரு மாதங்களாக ஜனாதிபதி மக்ரோன் மற்றும் இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் ஆகியோர் தொலைபேசியூடாக எவ்வித அழைப்புகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரஷ்யாவின் அரச ஊடக பேச்சாளர் Dmitry Peskov இதனை இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இரஷ்யா-உக்ரைன் யுத்தம் அரம்பித்ததில் இருந்து பல தடவைகள் விளாடிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் தொலைபேசியூடாக உரையாடியிருந்தார். போர் நிறுத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மக்ரோன் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக இருநாட்டு ஜனாதிபதிகளும் எவ்வித தொடர்பினையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக இரஷ்யாவின் ஊடக பேச்சாளரிடம் இன்று வினவப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “பிரான்ஸ் இரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையில் இருந்து அது ஒரு நட்பற்ற நாடு என தெரியவருகிறது. இரு நாட்டு ஜனாதிபதிகளும் உரையாடிக்கொள்வதில்லை. ஏனென்றால் அது அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். பிரான்ஸ் இரஷ்யாவுடனான நட்பில் இருந்து விலகிச் சென்றுள்ளது!” என அவர் தெரிவித்தார்.

இரஷ்ய-உக்ரைன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகிறது. யுத்தத்தை நிறுத்தும் படி இரஷ்யாவை கோரி வருவதுடன், இரஷ்யா மீது பல பொருளாதார தடையும் விதித்திருந்தது. இந்த தடைகளை நீக்கும் படி இரஷ்யா பகிரங்கமாகவே அச்சுறுத்தல் விடுத்திருந்தது. எரிவாயு வழங்குவதிலும் சிக்கலை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.