Header Ads

புர்கா உடைக்கு தடை விதிக்க விருப்பம் தெரிவிக்கும் பிரெஞ்சு மக்கள்!

 


இஸ்லாமியர்களின் கலாச்சார உடையான புர்கா (Veil) அணிய தடை விதிக்கும் சட்டம் ஒன்றுக்கு பிரெஞ்சு மக்கள் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த ஆதரவு தெரியவந்துள்ளது. பத்தில் 6 பேர் பேர் இந்த சட்டத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 39% வீதமானவர்கள் ‘முற்று முழுதாக இந்த தடைச் சட்டத்தை விரும்புவதாகவும்”, 24% வீதமானவர்கள் “ஓரளவு” விரும்புவதாகவும், 39% வீதமானவர்கள் ‘விரும்பவில்லை’ எனவும், 23% வீதமானாவர்கள் “முற்றுமுழுதாக விரும்பவில்லை!” எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் கடந்த 2004 ஆம் ஆண்டில் ‘பொது இடங்கள் மற்றும் பாடசாலைகள், கடற்கரைகள் போன்றவற்றில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமான ஆடைகளையோ, செயல்களையோ மேற்கொள்ளக்கூடாது!” என சட்டம் இயற்றப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின்னர் தற்போது இந்த சட்டம் தொடர்பாக விவாதம் ஒன்றை பாராளுமன்றத்தில் உயிர்ப்பிக்க Marine Le Pen ஆசைப்படுவதாக அவரின் ஊடகத்தொடர்பாளர் Sébastien Chenu அறிவித்துள்ளார்.

அதையடுத்தே மேற்படி கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் பத்தில் 6 பேர் மேற்படி சட்டம் நடைமுறையில் இருப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.  




No comments

Powered by Blogger.