Header Ads

உச்சத்தை நோக்கி - பெற்றோல் விலை!



தலைநகர் பரிசில் பெற்றோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி plomb 98 பெற்றோல் ஒரு லிற்றரின் விலை €1,99 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட €2 யூரோக்களுக்கு விற்பனையாகும் இந்த பெற்றோல் விலை, பிரான்சில் முன்னர் எப்போதும் இல்லாத விலையேற்றமாகும்.
தினமும் மகிழுந்து பயன்படுத்தும் பரிசைச் சேர்ந்த ஒருவர் €55 யூரோக்களுக்கு அடித்து வந்த பெற்றோல் தற்போது €65 யூரோக்களாக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த பெற்றோல் விலையேற்றல் பரிசில் மட்டுமே எனவும், புறநகர் பரிசில், குறிப்பாக Hauts-de-Seine மாவட்டத்தில் அதே plomb 98 பெற்றோலின் விலை €1,94 யூரோக்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பரிசில் டீசல் விலை €1,49 யூரோக்களில் இருந்து €1,60 யூரோக்களாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஓப்படைக்கின்றோம் .
👇
நன்றி

No comments

Powered by Blogger.