கொவிட் பரவலை கட்டுப்படுத்த சுமந்திரனின் சட்ட மூலத்தை முன்னகர்த்த அரசு தீர்மானம் - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
கொவிட் கட்டுப்படுத்தலுக்காக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பித்திருந்தார். பல நாட்களாகியும் சட்டமூலத்தை கருத்தில் எடுக்காது கிடப்பில் போட்டார்கள். தற்போது நிலமை மோசமடைந்துள்ளதால் அது தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சட்ட அந்தஸ்து அளிக்கும் வகையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலத்தை முன்நகர்த்தி சட்ட மாக்குவதற்கு அரசு தீர்மானித்திருக்கின்றது. நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பாக தீர்மானிப் பதற்காக இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டிருக்கின்றது.'கொவிட் - 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம்'என்று அரசு சமர்ப்பித்த சட்டமூலம் ஒன்று நாளை நாடாளுமன்றுக்கு வருகின்றது. கொவிட் தொற்றுக்காலத்தில் இணையத்தில் நீதிமன்ற அமர்வுகளை நடத்தவும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்பான கால அவகாசங்களை கொவிட் தொற்று நெருக்கடிக்கு ஏற்ப தள்ளிப் போவதை அங்கீகரிக்கவும் வழிசெய்யும் விதத்தில் இந்தச் சட்டமூலம் அமைந்திருக்கின்றது.
No comments