GSP+ வரிச்சலுகைக்காக சட்டத்தை திருத்துகிறது இலங்கை
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தியமைக்க அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.
உள்நாட்டு ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய தகவலுக்கமைய, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு வரும்படி அரசாங்கம் அழைப்பு விடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற அரசாங்கம் விருப்பம் வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments