ஜானதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!
லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், உணவு ஆணையாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மாகாணசபைக்கு உட்பட்ட மற்றும் சுகாதார துறைக்குட்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments