Header Ads

புதிய சட்டமா அதிபரின் முதலாவது அதிரடி நடவடிக்கை


புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை இரத்துச் செய்துள்ளார்.

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பதவி நிலை இரத்து செய்யப்படுதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள். முன்னைய சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்ன செயற்பட்டார்.

தப்புல டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்ன, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.