Header Ads

விலை அதிகரிப்புச் செய்வதா? இல்லையா? இன்று இறுதி முடிவு

சமையல் எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய விலை அதிகரிப்புச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு நாளை கூடி இறுதி முடிவை அறிவிக்கும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

500 தொடக்கம் 700 ரூபா வரை சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த நாட்களில் தெரிவித்திருந்தார்.

விலைகள் தொடர்பில் ஆராய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமை பற்றி விரிவாக ஆராயவுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க


 

No comments

Powered by Blogger.