Header Ads

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க புதிய திட்டம்

 

உலகில் உள்ள வறிய மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளின் உட்கட்டமைப்பு நிர்மாணங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டத்திற்கு செல்வந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 நாடுகளின் தலைவர்கள் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான உட்கட்டமைப்பு நிர்மாணங்களை மேற்கொள்வதன் ஊடாக வறிய மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளில் சீனா தமது ஆதிக்கத்தை அதிகரித்துவரும் நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் இங்கிலாந்தின் கோர்ன்வோல் நகரில் நடைபெறும் ஜி 7 நாடுகளின் மாநாட்டில் இந்த புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் கோர்ன்வோல் நகரில் உலக செல்வந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டின் இறுதி நாள் இன்றாகும்.

இந்த மாநாட்டின் நேற்றைய 2 ஆம் நாளில் வறிய மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களுக்கு மாற்றீடாக தரமிக்க திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அந்த வகையில் சிறந்த உலகை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்ற அமெரிக்காவின் முன்மொழிவிற்கு ஜி 7 நாடுகளின் தலைவர்கள்

தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளனர். தமது நாட்டின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் பல நாடுகளில் துறைமுகங்கள், வீதிகள் மற்றும் தொடரூந்து மார்க்கங்களை அமைப்பதற்கு சீன அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கியுள்ளது. எனினும் இதன் மூலம் நாடுகளை கடனாளி ஆக்கி, அதன் மூலம் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் பெறுமதிமிக்க ஊக்கம், உயர்தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையான பங்களிப்பை தாம் வழங்குவோம் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

எனினும் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ள திட்டத்திற்கு எவ்வாறு நிதி அளிக்கப்படும் என்ற விரிவான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை விடுவிப்பதற்கான கட்டடத்தில் ஜி 7 நாடுகள் அமைப்பு இதுவரை வரவில்லை என ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்கல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே ஜி 7 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் மாநாட்டில் எதிர்கால தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்கீழ் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கான காலத்தை குறைத்தல் மற்றும் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான சிகிச்சைகளை துரிதமாக முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் உள்ளடங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று புதிய திட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க


No comments

Powered by Blogger.