கடன் சலுகை கிடைக்கவில்லையா? உடனடியாக முறையிடுங்கள்
வங்கி அல்லது வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய கடன் சலுகைகள் வழங்கப்படாத பட்சத்தில் அது குறித்து முறையிடுமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகைகளை வழங்குமாறு கடந்த மாதம் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தமக்கு உரிய கடன் சலுகைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய 011 – 24 77 966 எனும் இலக்கத்தை ஏற்படுத்தி மத்திய வங்கியின் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவன பிரிவுக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments