அடுத்தடுத்து டுபாயை கலக்கிய இலங்கை இளைஞர்கள் !
அடுத்தடுத்து டுபாயில் அதிர்ஸ்ட இலாபச் சீட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை இலங்கை இளைஞர்கள் வென்றுள்ளனர்.
டுபாயில் தொழில் செய்துவரும் ரசிக்க என்கிற இளைஞன், இம்முறை பிக் டிக்கட் என்கின்ற டுபாயில் பிரபல்யமான அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் 15 மில்லியன் டிரஹம் (இலங்கை ரூபாயில் 81 கோடி ரூபா) முதல் பரிசாக வெற்றிகொண்டிருக்கின்றார்.
இந்த தகவலை அபுதாபி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. சிவில் பொறியியலாளரான ரசிக்க, தன்னுடன் மேலும் ஐவரை இணைத்துக் கொண்டு இந்த டிக்கட்டை வாங்கிய நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்களை வென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் டுபாயில் மொஹமட் இம்ஷிக் என்கின்ற இலங்கை இளைஞன் 12 மில்லியன் டிரஹமை வெற்றிகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments