இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை அச்சுறுத்தி கப்பமாக பணம் பெறும் மோசடி நடவடிக்கை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தன.. அதற்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளுக்கமைய அவ்வாறான 50 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அழைப்புகள் பல சந்தர்ப்பத்தில் வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசி இலக்கங்களுக்கே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கப்பமாக பணம் பெறுவதற்காக குற்றவாளிகள் இந்த முறையை பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் மாத்திரம் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அங்கு அழைப்பேற்படுத்தும் நபர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக் கொள்ள அவசியம் எனவும், சிரமமின்றி அந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வங்கி கணக்கிற்கு பணம் வைப்பிடுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு வரும் அழைப்புகளை கண்டுக்கொள்ளாமல் தவிர்க்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி ஒரு போதும் வைப்பிட வேண்டாம் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments