எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் முக்கிய உறுப்பினர் விலகல்!
எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் பதவியை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த வாரம் இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணிகளை கருத்திற் கொண்டு அவர் அமைச்சரவை உப குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிவாயு விலையை அதிகரிக்குமாறு எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் பல அரசாங்கத்துக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இவ்வாறான நிலையில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன்பில, மஹிந்த அமரவீர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. எரிவாயு விலையேற்றம் குறித்து எரிவாயு நிறுவனத்தினர் முன்வைத்த யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சரவை உபகுழுவினர் மீளாய்வு செய்தனர்.
இதற்கமைய எரிவாயு விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமது தீர்மானத்தை அமைச்சரவை உபகுழுவினர் முன்வைத்தனர். இந்நிலையிலேயே தனிப்பட்ட காரணத்துக்காக அமைச்சர் உதய கம்மன்பில இந்த குழுவிலிருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments