எந்தநேரத்திலும் பயணத்தடை அமுலுக்கு வரலாம்! இராணுவ தளபதி
நாட்டில் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் பயணத்தடை எந்த நேரத்திலும் மீள அமுல்ப்படுத்தப்படலாம். என தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் இனிமேல் முழுமையான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.அத்தோடு, நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த அனுமதி இல்லை எனவும் அவர் கூறினார்
சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு அழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
No comments