Header Ads

சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நடிகை பியூமி ஹன்ஸமாலி; வெளியான தகவல்


கொரோனா விதிமுறைகளை மீறி கடந்த மே 30ம்திகதி ஷங்கரீலா ஹோட்டலில் பிறந்தநாள் விருந்துபசாரத்தில் நடிகை பியூமி ஹன்ஸமாலி பங்கேற்றிருந்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் பூதாகரமாகியதையடுத்து இவ்விருவர் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டபோது பியூமி வாகனத்தில் இருந்தபடி பேஸ்புக் லைவ் வீடியோ , அதன்பின்னர் இலங்கையின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பியூமியின் தொலைபேசி அழைப்பிற்கு செவிசாய்த்து அவரது உடைகளை தனிமைப்படுத்தல் இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதித்தமையை அடுத்து ஏற்பட்ட விமர்சனங்கள் என கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பியூமி சமூக ஊடகப்பரப்பில் பேசுபொருளாக வைத்துள்ளன.

1992ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி பிறந்த பியூமி ஹன்ஸமாலிக்கு 28 வயதாகிறது . இவரது தந்தை நிஹால் லக்ஸ்மன் கோமஸ் எனவும் தாய் வசந்தி பெரேரா எனவும் குறிப்பிடப்படுகின்றது. குடும்பத்தில் ஒரே பிள்ளையான பியூமி ,ராஜகிரியவிலுள்ள ஸ்ரீ சோபித வித்தியாலயத்தில் பாடசாலைககல்வியைப் பூர்த்திசெய்துள்ளார்.

இவர் சிறுவயது முதல் பல ஆண்டுகளாக வசித்த இல்லம் ராஜகிரிய ஒபயசேகரபுர பகுதியில் இருந்து கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றபோதும் அவர் தற்போது அங்கு வசிப்பதில்லை. பியூமி ஹன்ஸமாலி ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்துவாழ்பவர் என்பதுடன் அவருக்கு கவிங்க என்ற மகன் உள்ளார்.

இலங்கையின் பிரபல முன்னாள் மொடல் அழகியான ரொஷேன் டயஸின் என்ற மொடலிங் நிறுவனத்தில் பயிற்சிக்காக 2011ல் பியூமி இணைந்து தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல மொடலிங் அழகு ராணிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன்படி 2015ம் ஆண்டில்தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற Mrs.Globe போட்டியில் பங்கெடுத்த பியூமி 2016ம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற Mrs. Noble Queen போட்டியில் பங்கேற்றுள்ளார். 2017ல் துருக்கியில் நடைபெற்ற Best Model in Asia in Future Fashion Faces World போட்டியில் பங்கேற்றுள்ளார். 2014ல் முதன் முறையாக ஐடிஎன் தொலைக்காட்சியினுடாக சின்னத்திரையில் கன்னிப்பிரவேசத்தை மேற்கொண்ட பியூமி 2018 ல் ‘வஸ்ஸானய சந்த ‘என்ற திரைப்படத்தினூடாக சிங்கள சினிமாவில் அறிமுகமானார்.

அதே ஆண்டில் ‘ரைகமயாய் கம்பலயாய்’ என்ற சிங்களத்திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது லக்னோவ் என்ற மலையாள மொழிப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் பியூமி. 1992ம் ஆண்டில் யஸோதா விமலதர்ம ஆச்சர்யர்ன் என்ற மலையாளப்படத்தில் நடித்த பின்னர் இலங்கையில் இருந்து இந்தியப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் நடிகையாக பியூமி அறியப்படுகின்றார். இதுவரை அவரது சினிமா வாழ்க்கையோ சின்னத்திரை வாழ்க்கையோ பெரிய வெற்றிகளைக் காணாத போதும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டகிராமில் அவரது ஆதிக்கம் அதிகமாகவுள்ளது.

16லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரது இன்ஸ்டகிராமை பின்தொடர்கின்றவர்களாக இருக்கின்றனர். ஃபேஸ்புக்கிலும் அவரது பிரசன்னம் இருக்கின்றபோதும் இன்ஸ்டகிராம் அளவிற்கு இல்லை. இதனைத்தவிர பியூமியை டுவிட்டரில் 123ஆயிரம் பேர் பின்தொடருகின்றனர்.

கடந்த ஜுன் 2ம் திகதி பியூமி தனது பேஸ்புக்கிலிருந்து நேரலையில் பேசியவேளை இலங்கை அரசியல் பிரமுகர் ஒருவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பியூமியின் நேரலையை 6500 பேர் பார்த்துக்கொண்டிருந்த வேளை டில்வின் சில்வாவின் நேரலையை 470 பேர் மாத்திரமே பார்த்துக்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.