வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் இருந்து வந்த உத்தரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாகனங்களுக்கு ஸ்டிக்கர் முறையை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் பயணக்கட்டுப்பாட்டு இடையே வாகனங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு பொலிஸார் அறிமுகப்படுத்திய ஸ்டிக்கர் முறை தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்ட நிலையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த ஸ்டிக்கர் முறையை நிறுத்தும்படி கட்டளையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் அதிகளவிலான தொலைபேசி அழைப்புக்கள் வந்து தன்னிடம் பலரும் முறையிட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஜனாதிபதி, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் விடயத்தை தெரிவித்து தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி இவ்வாறு ஸ்டிக்கர் முறையை நிறுத்தச் சொன்ன விடயம், பொலிஸ் விவகார அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு அதன் பின்னரே தெரியவந்ததை தொடர்ந்து ஜனாதிபதியை உடன் சந்தித்த அவர் திட்டத்தை விளக்கப்படுத்தியதன் பின்னரே தற்காலிக அனுமதியை அதற்காக அவர் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த ஸ்டிக்கர் திட்டமானது பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண ஆகியோரால் செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments