Header Ads

ராஜபக்க்ஷர்களை ஆட்சிப்பீடமேற்றியது மிகப்பெரும் தவறு; வருந்தும் தேரர்

 இலங்கை மக்களை ஆத்திரப்படுத்தும் அளவுக்கு இன்றைய கோட்டா-மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட கொழும்பு நாரஹேன்பிடி அபயராமய விகாரையின் விகாராதிபதியான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்ன போதே அவர் இதை கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த தேரர்,

ராஜபக்ச அரசாங்கத்தைப் பற்றி சரியாக அறிந்துகொள்ளாமல்,அவர்களைக் ஆட்சிக்கு கொண்டுவந்தமை மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் அதிலுள்ள இரசாயனங்கள் மற்றும் பொருட்கள் கடலில் கலந்ததினால் நூற்றுக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் இன்று இறந்த நிலையில் கடற்கரையில் மீடகப்படுகின்றன. இது குறித்து இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவா வெளியிட்ட கருத்து நகைப்பிற்குரியதாகும். கடல்வாழ் உயிரினங்களின் சூழ்ற்சியே இதற்குக் காரணம் என அவர் கூறுவது வேடிக்கையாகும். ஆட்சிக்கு வந்த அத்தனை அரசாங்கங்களும் ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளை அதிகரித்தன.

அவ்வாறு அதிகரிக்கப்படுவதற்கான கால, நேரம் தகுதியாக அமைந்ததாக உள்ளது. இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அதனைக் கவனிக்காமல் எரிபொருள் விலையை அதிகரித்திருக்கின்றதை ஏற்கமுடியாது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனித்து எடுத்த முடிவாக இதனைக் கருதவும் முடியாது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்பதால் அமைச்சரவையிலிருக்கின்ற அத்தனை அமைச்சர்களும் இதற்கான பொறுப்பினை ஏற்கவேண்டும்.

அதேபோல தற்போதைய அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக நாடு எந்த இடத்திற்குத் தள்ளப்படுமோ என்கிற அச்சம் எமக்குள் ஏற்பட்டிருக்கின்றது. இதனிடையே மக்கள் ஆத்திரமடைந்தால் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. வீதிப் போராட்டங்களை நடத்தும் அளவுக்கு மக்களைத் தள்ளிவிட வேண்டாம். அவ்வாறு தள்ளிவிடும் பட்சத்தில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் அன்றே கடைசியாகும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தெரிந்து கொண்டு சென்றால் கதிர்காமம், தெரியாமல் சென்றால் நடுத்தெருவு தான் என்று மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பழமொழியொன்று உள்ளது. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர தெரியாதத்தனமாக ஆதரவளித்துவிட்டோம். அதனால் நாங்களும் இன்று பயணத்தை முழுமையாக முடிக்க முடியா அளவில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளோம் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.