Header Ads

மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்?


 எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை அடுத்து மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

நேற்றைய தினம் காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அச் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்ரமசிங்க அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன , கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க


No comments

Powered by Blogger.