இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அத்தகைய நடவடிக்கையை தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட எம்.பி. நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த அரசு அமுல்படுத்திய விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஒரு லீட்டர் 92 பெற்றோல் ரூ .177 க்கு விற்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு இதுபோன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments