எரிபொருள் விலை அதிகரிப்பு சர்ச்சை -இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் கம்மன்பில?
எரிபொருள் விலை அதிகரிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மத்தியில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு எடுத்த முடிவிற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
விசேடமாக அவர் பிரத்திநிதித்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அமைச்சர் எடுத்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments