Header Ads

இலங்கையின் பிரபலங்கள் பிரித்தானியாவில் சிறுநீர் கழித்த வைரல் வீடியோ


 இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ரி20 தொடரில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் படுதோல்வியடைந்த நிலையில் இலங்கை அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குஸல் மென்டிஸ் ஆகியோர் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அணிகள் கட்டுக்கோப்பாக வழிநடத்தப்படும் பையோ பபிள் காப்பு குமிழியை விட்டு வெளியே சுற்றிய காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியில் காணப்படும் இரு வீரர்களையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப கிரிக்கட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு நாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம் நேற்றிரவு இந்த வீரர்கள் வெளியே சுற்றிவிட்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஏனைய வீரர்களுடன் பழகியிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் ஏனைய வீரர்களுக்கும் கொரோனா அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதனால், எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிர்வாகத்திலுள்ள அதிகாரியொருவர் கூறுகையில், இதுவரை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அணிவீரர்கள் விதிமுறை மீறியமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலதீக விசாரணைகளின் பின்னரும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு அமையவுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை ஜுன் 29 திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது போட்டி ஜுலை 2ம் திகதியும் மூன்றாவது போட்டி ஜுலை 4ம் திகதியும் நடைபெற திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இங்கிலாந்துடனான தொடரை நிறைவுசெய்துகொண்டு இலங்கை அணி தாயகத்தில் இந்திய அணிக்கெதிரான தொடரை ஜுலை 13ம் திகதிமுதல் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.