கல்முனையில் இரவு வேளையில் தீ பந்த போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் விடுதலை முன்னணி அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரமுகர்கள் கண்டன தீப்பந்த போராட்டத்தை கல்முனை நகரில் இன்று மாலை முன்னெடுத்தனர்.
அம்பாறையின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலரும் ஒன்றிணைந்து அரசை கண்டித்த கோஷங்களையும் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடனும் குரலெழுப்பினர்
அரசி விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலைகளை பற்றியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தின் போது போக்குவரத்துக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments