பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தடுப்பு காவல் அனுமதியுள்ள காலம் வரை, கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் முதற்கட்டமாக 90 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments