வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இலங்கைக்கு நேரடி தாக்கமா?
வங்காளவிரிகுடாவின் வட பகுதியில் குறைந்த தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
மேல்,சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டிமாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வரை அதிகரிக்கலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளனர்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments