Header Ads

சீனா மற்றும் இலங்கை சின்னமே இது தான்; சீனத்தூதுவர் பகிரங்க அறிவிப்பு

தெற்காசியாவில் மிகவும் பெரியவிசேட சிறுநீரக வைத்தியசாலையை பொலனறுவை நகரில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

குறித்த வைத்தியசாலை சீனாவிடமிருந்து கிடைத்த நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த புராதன நகரில் சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை திறப்புவிழா வைபவத்தில் நினைவுப்படிகத்தை ராஜபக்ச திரைநீக்கம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ ஷென்கும்ஹொங்கும் கலந்துகொண்டனர். இதன்போது வைத்தியசாலை சீன -இலங்கை நட்புறவின் ஒரு சின்னமாகும் என குறிப்பிட்ட சீனத்தூதுவர், இதனால் தெற்காசிய மக்கள் சகலரும் பயனடையக்கூடியதாக இருக்கும் என  தெரிவித்தார்.

கடந்த ஒருசில வருடங்களாக சீனாவும் இலங்கையும் சீனாவும் பல்வேறு நெருக்கடிகளை குறிப்பாக கொவிட் -19 பெருந்தொற்று நோயின் விளைவான சாகாதார தாக்கங்களை சமாளிப்பதற்கு ஒன்று சேர்ந்து பாடுபட்டு இந்த அதிநவீன வைத்தியசாலை நிர்மாணத்தை திட்டமிட்ட நேரத்தில் பூர்த்திசெய்வதில் வெற்றிகண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்திருந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இத்தகைய சிறுநீரக வைத்தியசாலையை கட்டித்தருமாறு சீன அரசாங்க தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதனை நிர்மானம் செய்ய 30 மாதங்கள் பூரர்த்தியானது. குறித்த வைத்தியசாலை 25,000 சதுரமீட்டர்கள் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

அத்துடன் 200 பொதுநோயாளிகள் கட்டில்கள்,100 ஹிமோ டயலீசிஸ் கட்டில்கள் மற்றும் 20 தீவிர சிகிச்கை கட்டில்களைக் கொண்டிருப்பதுடன் .   அதிநவீன ஆய்வுகூடங்களையும் கதிரியக்க மற்றும் சி.ரி.ஸ்கான் சேவைகளையும் பெரிய கேட்போர் கூடத்தையும் கூட பொலனறுவை சிறுநீரக வைத்தியசாலை கொண்டுள்ளது.




🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க



No comments

Powered by Blogger.