Header Ads

இலங்கையிடம் மன்னிப்பு கோரும் கப்பல் நிறுவனம்!


இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ள அதேவேளை இதற்காக தாம் வருத்தமடைவதாகவும் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் சி.என்.ஏ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாமுவேல் யோஸ்கோவிட்ஸ் (Shmuel Yoskovitz) இதனை தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை கடற்கரையை சுத்தம் செய்ய சில உபகரணங்களை வழங்கியுளளதாகவும் தெரிவித்துள்ளார். “இந்த சம்பவம் வாழ்வாதாரத்திற்கும் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட தீங்கு குறித்து இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றும் யோஸ்கோவிட்ஸ் (Shmuel Yoskovitz)கூறினார்.

கொள்கலன் கப்பலின் பின் பகுதி மூழ்கிவிட்டதாகவும், இப்போது 21 மீட்டர் ஆழத்தில் தரைதட்டியுள்ளதாக தெரிவித்த அவர், கப்பலின் முன் பகுதியும் “மெதுவாக மூழ்கும்” என்றும் உண்மையான நிலைமையை மதிப்பிடுவதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டும், பின்னர் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும், எனவும் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு இழப்பீடு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது எவ்வளவு என்று கேட்கப்பட்டதற்கு, “இது இப்போது மதிப்பிடப்படுகிறது, ஆனால் இது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். முதலில், இந்த சம்பவம் எப்போது முடிவடையும் என்பதைப் பார்க்கவும் பின்னர் மொத்த சேதங்கள் மதிப்பீடு செய்யப்படும். அத்துடன் இந்த நேரத்தில் எந்தவொரு செலவு அல்லது சேதங்களையும் மதிப்பிடுவது “மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் நாங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளோம். எக்ஸ்-பிரஸ் (ஃபீடர்ஸ்) மீதான நேரடி நிதிச் சுமை மிகவும் குறைவாகவே இருக்கும், ”என்றார். நைட்ரிக் அமில கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விடயம் கப்பலின் குழுவினருக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. கப்பல் குழுவினர் அறிந்திருப்பதை யோஸ்கோவிட்ஸ் (Shmuel Yoskovitz)உறுதிப்படுத்தினர். ஆனால் கத்தார் மற்றும் இந்திய அதிகாரிகள் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு கசிந்த கொள்கலனை இறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார்.

கன்டெய்னர் முதன்முதலில் மே 10 அன்று துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் ஏற்றப்பட்டது என்றார். “கத்தாரில் உள்ள ஒரு துறைமுகமான ஹமாத்தில், கொள்கலன் கசிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதை வெளியேற்றச் சொன்னோம். துறைமுக அதிகாரிகள் அதை அனுமதிக்கவில்லை, ஏனெனில் அவர்களிடம் மனித சக்தி அல்லது வெளியேற்றுவதற்கு உடனடியாக உபகரணங்கள் இல்லை, என்றும் அவர் கூறினார்.

பின்னர், கப்பல் இந்தியாவின் துறைமுகமான ஹசிரவுக்குச் சென்றது, அங்கு ஹசிர துறைமுகத்தை நாங்கள் கொள்கலனை வெளியேற்ற அனுமதிக்குமாறு கேட்டபோது மீண்டும் அது நிராகரிக்கப்பட்டது, ஹமாத்தில் இருந்த அதே காரணங்களினால் கொள்கலனை இறக்க முடியவில்லை. எக்ஸ்-பிரஸ் பேர்ள் பின்னர் மே 19 அன்று இலங்கை கடலுக்கு வந்த மறுநாள் காலை புகை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதுவரை, ஒரு கொள்கலனில் இருந்து கசிவு மட்டுமே இருந்தது, அது குழுவினரால் கையாளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.