Header Ads

போலி தகவல்களை பகிர்வோருக்கு எச்சரிக்கை


 இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக போலி தகவல்களை பகிர்ந்து, பொதுமக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வோரை கண்டறிவதற்கான பொறுப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணிணி விசாரணை பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த விசாரணைகளுக்காக விசேட விசாரணை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக ஊடகங்களின் ஊடாக போலி தகவல்கள் பகிரப்படுவதினால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், கொவிட் தடுப்புக்கான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஒருவர், போலி செய்திகளை பகிர்வதன் ஊடாக, மக்களை பதற்றமான நிலைக்கு கொண்டு செல்வாராயின், அது அவருக்கு எதிராக பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது சரத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.