மஹிந்தவின் அதிரடி தீர்மானம்; பிரதமராகின்றார் நாமல் ?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் ஓய்வுபெறப் போவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கோரிக்கைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இணக்கம் வெளியிட்டிருப்பதாகவே கால்ட்ன் வளாகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழலில் 75 வயதை எட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக தனது மகன் நாமல் ராஜபக்ஷவை நிறுத்திவிட்டு, வரும் 2030ஆம் ஆண்டளவில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் திட்டத்தையும் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களுடன் பேசியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
திடீரென ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் பிரதமராக நாமல் செயற்படும் பட்சத்தில் எதிர்கட்சித்தலைவராக ஆவதற்கான தகுதியையும் அவர் கொள்வார் என்றே மஹிந்த ராஜபக்ஷ அனுமானித்திருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments