Header Ads

750 கடற்படை உறுப்பினர்களுடன் இலங்கை வரும் கப்பல்!


 இன்று இலங்கை வரும் பிரான்ஸின் கடற்படை குழு உறுப்பினர்களின் குழுவுக்கு, யால, மின்னேரியா-கவாதுல்லா, உடவலவ்வ மற்றும் ஹபரானையில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றின் தேசிய பூங்காக்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது கோவிட் -19 தொற்று நோயால் ஏற்கனவே மூடப்பட்டுள்ள பூங்காக்களாகும். பிரான்ஸின் 750 கடற்படை உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் இரண்டு கப்பல்களில் ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை (Bio safety bubble)“உயிர் பாதுகாப்பு குமிழியின் கீழ் இலங்கைக்கு வருகை தருகின்றனர். நட்டுக்கு வரும் அவர்கள் தேசிய பூங்காக்களைப் பார்வையிடுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் வேண்டுகோளின் பேரில், இந்த தேசிய பூங்காக்களை கடுமையான உயிர் குமிழி நிலைமைகளின் கீழ் பார்வையிட வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கை கடற்படை, சுகாதார வழிகாட்டுதல்களை உறுதி செய்யும் என சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து இராஜதந்திர மட்டத்தில் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயண குமிழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸ் தூதரகத் தகவல்படி, இந்த 3 நாள் வருகையின் மூலம் இலங்கைக்கு 250 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.