பொது போக்குவரத்து தடையால் ரூ.68 மில்லியன் இழப்பு
நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இலங்கை ரயில்வே மற்றும் இலங்கை போக்குவரத்து சபை இதுவரை 68 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அதன் தலைவர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, இலங்கை ரயில்வே துறைக்கு ரூபாய் 450 மில்லியனுக்கும் அதிகமான இழப்பும், இலங்கை போக்குவரத்து சபைக்கு ரூபாய் 320 மில்லியனுக்கும் அதிகமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஒரு நாளைக்கு 50 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ரயில்வே துறையின் சராசரி தினசரி வருமானம் சுமார் 15 மில்லியன் ரூபாய் என்றும் கூறப்படுகின்றது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments