முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2500 வழங்க தீர்மானம்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்´ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாயாக அதிகரிப்பது உகந்ததென அடையாளங்காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவில் கூறப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments