21ஆம் திகதிக்குப் பின்னரும் கட்டுப்பாடுகளா? இன்று அரசாங்கம் வழங்கிய பதில்
நாட்டில் எதிர்வரும் நாட்களில் பதிவாகின்ற கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 19 அல்லது 20ம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.
அதைவிடுத்து, உலகில் தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம், யாராலும் முன்பே எதையும் கூற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதன்போது மேலும் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments