வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடிய பிரபல யூடியூபருக்கு 2 சொகுசு பங்களா! கிளறும் பொலிஸார்
தமிழகத்தில் பெண்களை குறிவைத்து ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் மதனால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். பெண்களை தனது ஆபாச சேட்டிங்கால் கவர்ந்து, இச்சைகளை தீர்த்துக் கொண்டதாக எழுந்த புகாரால் யூடியூபர் மதன் சிக்கியுள்ளான்.
யூடியூபர் மதன், பப்ஜியை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச் செய்து தகாத புகைப்படங்களையும், வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளில் ஆயிரக்கணக்கிலான ரூபாயை சம்பாதித்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
யூ டியூப் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் தற்பொழுது சைபர் கிரைம் பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், நேரில் ஆஜராகுமாறு பொலிசார் மதனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
எனினும் அத்ற்கு , ஆஜராகாமல் தலைமறைவான மதன், இந்தியாவிலேயே அதிக பணம் கொட்டும் சேனலை நடத்தும் எனக்கு எப்படி சட்ட நடவடிக்கைளை எதிர்கொள்ள வேண்டும் என தெரியும் என திமிராக பேசினார். இதனிடையே, மதன் நடத்தும் யூடியூப் சேனலின் அட்மினாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த மதனை இன்று தருமபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் மதனுக்கு சொந்தமான 2 ஆடி கார்கள் மற்றும் 2 சொகுசு பங்களாக்களை பொலிசார் பறிமுதல் செய்ததுடன், மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதேவேளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தலைமறைவான மதனுக்கு, எப்படி 2 சொகுசு பங்களாக்கள் வாங்க முடிந்தது என்ற கேள்வி பொலிசாரிடம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், யூடியூபர் மதனை நம்பி பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் DCPCCBI@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். அதாவது, ரூ.5,000 ஏமாந்து இருந்தாலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘பப்ஜி’ மதனிடம் கைப்பற்றப்பட்ட 3 டேப்லட்களில் இருந்த 700 வீடியோக்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் இந்த வீடியோக்கள் முடக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments