Header Ads

14 ஆம் திகதிவரை பயணத்தடை நீடிப்பா? இராணுவத்தளபதி கூறியது


 எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மறுத்துள்ளார்.

அத்துடன், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார். அரசாங்கம் பயணத் தடையை நீடிக்க தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பயணத்தடை தளர்த்தியபோது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக தெரிவித்த அவர், வரும் நாட்களில் கண்டிப்பான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக கடந்த 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு  எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.