வர்த்தமானி அறிவிப்பை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை
வர்த்தமானி அறிவிப்பை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்உ தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாடு தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் "ஒரு முறை மாத்திரம் பயன் படுத்திவிட்டு வீசக்கூடிய பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், சம்போ பக்கற்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பை மீறிய நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments