Header Ads

தடையை மீறி சென்ற உயரதிகாரியின் மனைவி; தடுத்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

வீதித்தடையை மீறி உடற்பயிற்சி உடையில் சென்ற உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவிக்கு அனுமதி வழங்க மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது கொழும்பு – பொறளை மரதானை சந்தி ஆனந்த வீதியை மறித்து தடை போடப்பட்டுள்ள நிலையில் அந்த வழியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் வீதித்தடையை மீறிச் செல்ல முயற்சித்தார். அப்போது அங்கு கடமையில் இருந்த குறித்த பொலிஸ் அதிகாரி அவரை தடுத்து, பயணத்தடையை சுட்டிக்காட்டி வீட்டிற்குத் திரும்பும்படி கூறியுள்ளார்.

எனினும் தாம் உயர்பொலிஸ் அதிகாரி ஒருவரது மனைவி என்று குறித்த பெண் வாதிட்டதுடன் கணவருக்குத் தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார். இதனையடுத்து அழைப்பில் வந்த குறித்த உயர் பொலிஸ் அதிகாரி, மனைவியை மறித்த பொலிஸ் உத்தியோகத்தரை திட்டியதுடன், மனைவிக்கு அனுமதி வழங்கும்படி பணித்ததாக கூறப்படுகின்றது.

எனினும் அவ்வாறு தனிப்பட்ட ஒருவருக்கு பயணத்தடை இடையே அனுமதி வழங்குவதானால் சாதாரண மக்களுக்கும் அனுமதி வழங்கலாமே என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வாதிட்டிருக்கின்றார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், புஞ்சி பொறளை சந்தியிலுள்ள வீதித்தடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் குறித்து உயரிடத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் முறையிட்டதைத் தொடர்ந்து மீண்டும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஏற்கனவே இருந்த இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.