அதி முக்கிய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தீவிர ஆலோசனை?
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மிகுந்த சங்கடத்தில் இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த அமைச்சரால் எடுக்கப்படுகின்ற சில முக்கியமான தீர்மானங்கள் அரச உயர்பீடத்தினால் நிராகரிக்கப்படுகின்றதாக சொல்லப்படுகிறது.
அதன் காரணமாக கொரோனா தொற்று ஒழிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சராக தாம் தோல்வியை சந்தித்து வருவாகவும், அதனால் தனது மாவட்டத்திலும் தனது வாக்குவங்கிகூட சரியும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலைமை இப்படியே தொடருமாக இருந்தால் அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்யப் போவதாகவே அவர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
👇👇👇👇👇👇👇👇👇👇
No comments